ஈரானிய ஆயுதங்களுடன் சென்ற படகை கைப்பற்றிய பிரித்தானிய யுத்த கப்பல் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 2, 2023

ஈரானிய ஆயுதங்களுடன் சென்ற படகை கைப்பற்றிய பிரித்தானிய யுத்த கப்பல்

ஈரானிய ஆயுதங்களைக் கடத்திச் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை பிரித்தானிய யுத்த கப்பலொன்று இடைமறித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையொன்றின்போது இப்படகு இடைமறிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இவற்றில் அடங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறிய படகு இருள்சூழ்ந்த நேரத்தில் சர்வதேச கடற்பகுதியில் வேகமாக சென்று கொண்டிருப்பது அமெரிக்காவின் வான் கண்காணிப்பு மூலம் முதலில் அவதானிக்கப்பட்டது என ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் தென் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த இப்படகு பிரித்தானிய கடற்படையின் எச்எம்எஸ் லன்காஸ்டர் யுத்த கப்பலினால் இடைமறிக்கப்பட்டது எனவும் பின்னர்; ஈரானிய கடற்பகுதிக்கு இப்படகு கொண்டு வரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

மத்திய தூர ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியனவும் இப்படகில் அடங்கியிருந்ததாகவும் பிரித்தானிய அதிகாரிகள் தெரழிவித்தள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஈரான் - யேமன் கடல் வழியில் 2000 துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற பட ஒன்றை தாம் கைப்பற்றியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்திருந்தது.

யேமன் தலைநகர் சனாவை ஈரானிய ஆதரவு கொண்ட ஹெளதீ கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

அதையடுத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் யுத்தத்தில் தலையீடு செய்தனர்.

2022 பெப்ரவரியில் ஹெளதி இயக்கத்துக்கு ஆயுதம் விநியோகிப்பதை ஐ.நா பாதுகாப்புச் சபை தடை செய்தது.

No comments:

Post a Comment