இத்தாலியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பாக்கிஸ்தானின் முன்னாள் கால்பந்தாட்ட உதைபந்தாட்ட வீராங்கனையும் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்த விபத்தில் 29 வயது சஹீடா ராஜா உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சின்டோ என அழைக்கப்படும் இவர் பாக்கிஸ்தானின் கால்பந்தாட்ட ஹொக்கி அணிகளிற்காக விளையாடியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது மூன்று வயது மகனின் சிறந்த எதிர்காலத்திற்காக ஐரோப்பிய நாடுகளிற்கு சட்டவிரோத படகு பயணத்தை மேற்கொண்டிருந்த சஹீடா ராசா உயிரிழந்துள்ளார் என அவரின் நண்பி சுமையா தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது மகன் அந்த படகில் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்களிற்கு அவரின் உடல் மாத்திரம் வேண்டும் என சுமையா குறிப்பிட்டுள்ளார்.
அவரின் உடல் எங்கிருக்கின்றது என்ற விபரங்கள் எதுவுமில்லை எவரும் எந்த விடயங்களையும் தெரிவிக்கின்றார்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள குவெட்டா நகரத்தை சேர்ந்த சியா ஹசாரா சமூகத்தை சேர்ந்தவர் சஹீடா ராசா.
சர்வதேச வீராங்கனை என்ற போதிலும் அவரால் பாக்கிஸ்தானில் நிரந்தர தொழிலை பெற முடியவில்லை. மகனின் மருத்துவ தேவைக்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என அவரது தோழி தெரிவித்துள்ளார்.
அவருக்கு நீர் என்றால் பயம் அவர் இவ்வாறான ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது அவரது குடும்பத்தினருக்கும் தெரியாது என அவரது நண்பி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment