துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மூன்றுக்கான தலைவர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 10, 2023

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மூன்றுக்கான தலைவர்கள் நியமனம்

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் மூன்றுக்கான தலைவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

‘மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு’ பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். 

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரம் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அதனை வழிமொழிந்தார்.

அதேபோன்று, ‘தேசிய பாதுகாப்பு’ பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டார். 

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ முன்மொழிந்ததுடன், அதனைப் பாராளுமன்ற உறுப்பினர் சுமித் உடுகும்புற வழிமொழிந்தார்.

மேலும், ‘சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி’ பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டார். 

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்க முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வழிமொழிந்தார்.

கடந்த வியாழக்கிழமை (08) இடம்பெற்ற இக்கூட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இந்த நியமனங்களை அடுத்து, குழு உறுப்பினர்களுக்கு பிரேரணைகளை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன், இதன்போது இந்தக் குழுக்களின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆரம்பக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழுவொன்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகக் காணப்படுவதுடன், குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க, பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment