11 கிலாேவை கழிக்கும் சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் - செந்தில் தொண்டமான் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, March 4, 2023

11 கிலாேவை கழிக்கும் சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் - செந்தில் தொண்டமான் எச்சரிக்கை

(எம்.ஆர்.எம்.வசீம்)

தொழிலாளர்களினால் பறிக்கப்படும் தேயிலை கொழுந்திலிருந்து ஒரு தடவைக்கு 3 கிலாே கிராமை தோட்டக் கம்பனிகள் திட்டமிட்டு கழித்து வருகின்றன. இந்த சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்தாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு கடந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்ட பிட்டனர், அவர்கள் நாள் ஒன்றுக்கு பறிக்கும் தேயிலை கொழுந்தில் இருந்து தோட்டக் கம்பனிகள் 11 கிலாே கிராம் திட்டமிட்டு கழித்து வருகின்றன.

தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலை கொழுந்து நாள் ஒன்றுக்கு நிறுக்கப்படும் 3 தடவைகளில் தலா 3 கிலாே கழிக்கப்படுவதுடன் தொழிற்சாலை கழிவு என 2 கிலாே கிராம் கழிக்கப்படுகிறது.

இதன் பிரகாரம் மொத்தமாக நாள் ஒன்றுக்கு பறிக்கும் தேயிலை கொழுந்தில் இருந்து 11 கிலாே கிராம் கழிக்கப்படுகிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கனபதி கணகராஜ், அளவீட்டு அலகுகள் திணைக்களத்தின் உத்துயோகத்தர்கள் சிலரை கொகவந்தலாவை தோட்டத்தில் தேயிலை கொழுந்து நிறுக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு இவ்வாறு இடம்பெறுவதை கையும் கலவுமாக கண்டுபிடித்தனர்.

இவ்வாறான நடவடிக்கை பொதுவாக அனைத்து தோட்டங்களிலும் இடம்பெறுகிறது. இது தொடர்பாக தோட்ட சங்கத்துக்கு எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறோம்.

எனவே இந்த நடவடிக்கையை தோட்டக் கம்பனிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதுடன் வெளிநாடுகளிலும் இந்த கம்பனிகளுக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்போம். இதன் மூலம் இவர்களின் தேயிலை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை விடுக்கிறோம்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களும் பறிக்கும் தேயிலை கொழுந்தில் 3 கிலாே குறைப்பதற்கு ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவ்வாறு ஏற்றுக் கொண்டால் காலப்போக்கில் இது மேலும் அதிகரிக்கும். கம்பனிகளின் இந்த நடவடிக்கைகு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment