2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி இன்று முதல் யூரோ வலயத்தில் குரோஷியா இணைந்துள்ளது.
இதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான நாணயமான யூரோவை தனது நாணய அலகாக இன்று முதல் குரோஷியாவும் பயன்படுத்துவதுடன், கடவுச்சீட்டுகள் அவசியமற்ற ஐரோப்பிய வலயத்திலும் குரோஷியா நுழைந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இத்திட்டங்கள் அமுலாகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து சுமார் ஒரு தசாப்தத்தின் பின் இவ்வலயங்களில் குரோஷியா இணைந்துள்ளது
'குனா' எனும் தனது முந்தைய நாணயத்துக்கு குரோஷியா விடை கொடுத்துள்ளது.
‘யூரோஸோன்’ எனும் யூரோ நாணய வலய நாடுகளில் 20 ஆவது அங்கத்தினராக குரோஷியா இணைந்துள்ளது
கடவுச்சீட்டுகள் அவசியமற்ற ‘ஷெங்கன்’ வலயத்திலும் 27 ஆவது நாடாக குரோஷியா இணைந்துள்ளது.
செங்கன் வலயம் உலகின் மிகப்பெரிய கடவுச்சீட்டு இன்றி பயணம் செய்ய முடியுமான பகுதியாக உள்ளது. இந்த வலயத்தில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உறுப்பு நாடுகளிடையே பயணிக்க முடியுமாக உள்ளது.
முன்னாள் யூகோஸ்லாவியாவின் ஒரு குடியரசான குரோஷியா, 1991 ஆம் ஆண்டு சுதந்திரப் பிரகடனம் செய்தது. 2013 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் அந்நாடு இணைந்தது.
No comments:
Post a Comment