இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 1, 2023

இன்று முதல் அமுலாகும் வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள்

(இராஜதுரை ஹஷான்)

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரி திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ஞாயிறு (1) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய தனியார் வருமான மாத வரி அறவிடல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடப்படுகிறது.

மாதம் ஒரு இலட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர் மாத வரி செலுத்த வேண்டும். இதற்கமைய ஒரு மாத சம்பளம் ஒரு இலட்சம் பெறுபவர் 3,000 ரூபாவும், 2 இலட்சம் சம்பளம் பெறுபவர் 10,000 ரூபாவும், 2,50000 ரூபா சம்பளம் பெறுபவர் 21,000 ரூபாவும், 3 இலட்சம் சம்பளம் பெறுபவர் 35,000 ரூபாவும், 3,50000 ஆயிரம் சம்பளம் பெறுபவர் 52,500 ரூபாவும், 4 இலட்சம் சம்பளம் பெறுபவர் 70,500 ரூபாவும், 5 இலட்சம் சம்பளம் பெறுபவர் 10,6000 ரூபாவும், 7,50000 ரூபா சம்பளம் பெறுபவர் 19,6500 ரூபாவும், 10 இலட்சம் சம்பளம் பெறுபவர் 28,6500 ரூபாவும் மாத வரி செலுத்த வேண்டும்.

அத்துடன் பொருள் மற்றும் சேவை, விவசாயம், கல்வி, சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய சேவைகளுக்கான வரி 30 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர், சமூக பாதுகாப்பு வரிகளை கட்டம் கட்டமாக மறுசீரமைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது

No comments:

Post a Comment