எனது அரசியல், தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை - அஜித் கப்ரால் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 1, 2022

எனது அரசியல், தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை - அஜித் கப்ரால்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் தனது அரசியல் மற்றும் தொழில்துறை வாழ்க்கை இன்னமும் முடிவிற்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தகுந்த வாய்ப்பு கிடைத்தால் நாட்டிற்கு மீண்டும் சேவையாற்ற தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவருடைய அரசியல் பயணத்திலும் வெற்றிகள் தோல்விகள் கண்டிப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் ஏனையவர்கள் தன்னை சந்தேகிக்க தொடங்கியவேளைதான் தன்னை நம்ப ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை முடிவிற்கு வந்துவிட்டது என நான் கருதவில்லை, இதன் காரணமாக பொருத்தமான தருணம் வந்தால் சேவையாற்ற தயாராகவுள்ளேன், இல்லாவிட்டால் எனக்கு ஆர்வமுள்ள பல விடயங்களில் கவனத்தை செலுத்தும் வாழ்க்கையை வாழ்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment