டக்ளஸ், அதாவுல்லாஹ்வின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, December 1, 2022

டக்ளஸ், அதாவுல்லாஹ்வின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (30) இடம்பெற்ற நிறைவேற்று சபைக் கூட்டத்தில் டக்ளஸ், அதாவுல்லாஹ்வின் கட்சிகள் உட்பட 4 கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், குறித்த கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகளின் செயலாளர்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில் தாங்களோ அல்லது தமது கட்சியின் நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் எவருமோ பங்குபற்றமாட்டார்கள் என அந்தக் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச விமுக்தி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் டி. கலன்சூரிய, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ ஜயவர்தன யாப்பா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஏ.எம்.எம். அதாவுல்லாஹ் ஆகியோரே கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment