கொழும்பிலிருந்து காங்கேசந்துறைக்கு சென்று கொண்டிருந்த நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதத்துடன் சிறிய பஸ்ஸொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (01) பி.ப. 1.00 மணிக்கு யாழ்ப்பாணம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அரியாலை ஏவி வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் வைத்து குறித்து விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது பஸ்ஸில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார்.
விபத்தில் புகையிரதத்திற்கும் பஸ்ஸுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment