வெளிநாட்டவர் 1955 பேர் கடந்த நான்கு வருடங்களில் ஊழல் மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டிலேயே அதிகமான வெளிநாட்டவர் இவ்வாறு வெளியேற்றப்பட்டதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் 898 பேர் இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக 2018ஆம் ஆண்டு 678 பேரும், 2020ஆம் ஆண்டில் 249 பேரும், கடந்த வருடத்தில் 130 பேரும் இவ்வாறு வெளியேற்றப்பட்டனரென்றும் திணைக்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த வழக்கு விசாரணை முடிவுகளுக்கமையவே இவ்வௌியேற்றங்கள் இடம்பெற்றன.
இவர்களில் 92 பேர் இந்தியர்களாவர், நேபாளத்தவர் 09, நைஜீரியர் 07, பாகிஸ்தானியர் 06, ரஷ்யர் 05, மாலைதீவு நாட்டவர் 02 ஆகியோரும் இவ்வாறு வெறியேற்றப்பட்டனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment