ஹிருணிகா, ஆதர்ஷா இருவரிடமும் 1.5 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க : வேண்டுமென்றே தீங்கிழைப்பதாக குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, December 30, 2022

ஹிருணிகா, ஆதர்ஷா இருவரிடமும் 1.5 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் ஆசு மாரசிங்க : வேண்டுமென்றே தீங்கிழைப்பதாக குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க, அவரது முன்னாள் காதலியான ஆதர்ஷா கரந்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரிடம், தனது சட்டத்தரணி ஊடாக 1.5 பில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷா ஆகியோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்து பேராசிரியர் ஆசு மாரசிங்கவே இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கத்திற்காக தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் ஆசு மாரசிங்கவின் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது ஆசு மாரசிங்க நாய் ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷா ஆகியோர் 1.5 பில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்ட அவமதிப்பு தொடர்பில் 500 மில்லியன் ரூபாவை ஹிருணிகா பிரேமச்சந்திர செலுத்த வேண்டுமென்றும், ஒரு பில்லியன் ரூபாவை ஆதர்ஷா செலுத்த வேண்டுமென்றும் அறிவிக்குமாறு பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு, இரு தரப்பினரும் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை அறிவித்தல் வழங்கப்பட்ட நாளிலிருந்து (29) 14 நாட்களுக்குள் வழங்கத் தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 24 அன்று, சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்ட காணொளிக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆசு மாரசிங்க முறைப்பாடு செய்தார்.

மேற்கூறிய பெண் இயக்குநராக பணியாற்றும் தனது வாடிக்கையாளர் மற்றும் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறில் கேள்விக்குரிய காணொளி சிதைக்கப்பட்டது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment