வாகன இலக்கத் தகட்டில் மாகாண எழுத்து நீக்கம் : ஜனவரி 01 முதல் அமுல் - News View

About Us

About Us

Breaking

Friday, December 30, 2022

வாகன இலக்கத் தகட்டில் மாகாண எழுத்து நீக்கம் : ஜனவரி 01 முதல் அமுல்

ஜனவரி 01 முதல் புதிதாக வாகனங்களை பதிவு செய்யும் போதும், உரிமை மாற்றத்தின் போதும் மாகாண எழுத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் உரிமை மாற்றம் செய்யப்படும் போது மாகாண எழுத்துகள் காரணமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அடிக்கடி மாற்றம் செய்ய நேரிடும் சிக்கல்களை தவிர்க்க வாகன இலக்கத் தகடுகளிலுள்ள மாகாணங்களைக் குறிக்கும் ஆங்கில எழுத்துக்களை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வாகன உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து திணைக்களத்திற்கு இது தொடர்பில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் சிக்கல்களை இலகுபடுத்தும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment