O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின : மீளாய்வு விரைவில் அறிவிக்கப்படும் : ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் தொடர்பு கொள்ளவும் - News View

About Us

About Us

Breaking

Friday, November 25, 2022

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின : மீளாய்வு விரைவில் அறிவிக்கப்படும் : ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் தொடர்பு கொள்ளவும்

2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் தற்போது (25) பரீட்சைகள் திணைக்களத்தின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இதேவேளை, 2021 க.பொ.த. சாதராண தரப் பரீட்சைகள் இவ்வருடம் (2022) மே 23ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 01ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

குறித்த பரீட்சைக்கு, பாடசாலை பரீட்சார்த்திகள் 407,129 பேர், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 110,367 பேர் உள்ளிட்ட 517,496 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள 542 இணைப்பு நிலையங்களுடன் இணைந்தவாறு, 3,844 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.

பெறுபேறுகளின் மீளாய்வு
க.பொ.த. (சா/த) பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பம் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படுமென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

0112784208/ 0112784537
0113188350/ 0113140314
1911

கையடக்க தொலைபேசிகளில் பெறுபேறுகளை பெற.
Exams ஒரு இடைவெளி சுட்டிலக்கம் டைப் செய்து உரிய வலையமைப்பின் அடிப்படையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Mobitel - 8884
Hutch - 8888

No comments:

Post a Comment