வெளியிடப்படுகிறது பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 30, 2022

வெளியிடப்படுகிறது பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள்

க.பொ.த உயர் தரம் 2021 (2022) பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி, நாளை 02 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வரலாற்றிலேயே முதற்தடவையாக விண்ணப்பபடிவங்கள் கோரப்பட்டு மிகவும் குறுகிய காலத்துக்குள் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை அனுமதிக்கும் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதன்படி பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு இரண்டு மாதம் ஒரு வாரத்துக்குள் வெட்டுப் புள்ளிகளை வெளியிட பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பரீட்சைக்குரிய பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் நவம்பர் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

க.பொ.த உயர் தர 2021(2022) பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் 2,36,035 பேரும், தனியார் பரிட்சார்த்திகள் 36,647 பேருமென மொத்தம் 2,72,682 பேரும் தோற்றி இருந்தனர். இதில் 1,71,497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதிகளை பெற்றிருந்தனர்.

அவ்வாறு பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்தபட்ச தகுதியைப் பெற்றுக் கொண்டவர்களில் 1,49,946 பேர் பாடசாலை மாணவர்களாவர். இவர்களில் 21,551 தனியார் பரீட்சார்த்திகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இப்பரீட்சை முடிவுகளின்படி அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 42,519 மாணவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment