பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, October 10, 2022

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2022 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்தும், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதை நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிற்காக இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட் மற்றும் பிலிப் டிவிக் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment