சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன அதி விசேட வர்த்தமானி வெளியீடு - News View

About Us

About Us

Breaking

Monday, October 10, 2022

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - அமைச்சர் பந்துல குணவர்தன அதி விசேட வர்த்தமானி வெளியீடு

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், செல்லுபடியாகும் காலத்தை புதுப்பித்தல் அல்லது நீடித்தல், ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவுகள் 44, 123, 124, 125, 126, 126ஆ, 128, 132, 132அ, 231 என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கமைய குறித்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment