அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரச நிறுவனங்களுக்கு மட்டுமே கால அவகாசம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரச நிறுவனங்களுக்கு மட்டுமே கால அவகாசம்

அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்களில் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல அரச நிறுவனங்களில் நிலுவையிலுள்ள மின் கட்டணங்களை வசூலிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின் கட்டணம் செலுத்தாமையால் அண்மையில் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் மின் வெட்டு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாமென மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த கூறியுள்ளார்.

No comments:

Post a Comment