தேசிய பூங்காக்களில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவும் : சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

தேசிய பூங்காக்களில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவும் : சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்பு

தேசிய பூங்காக்கள் மற்றும் ஏனைய முக்கிய இடங்களுக்கு மக்கள் செல்வதை ஒழுங்குபடுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சிங்கராஜ வனப் பகுதி, சிவனொளிபாத மலை வனாந்தர சரணாலயம், ஹோர்டன் சமவெளி, வில்பத்து தேசிய பூங்கா உள்ளிட்ட தேசிய பூங்காக்கள் மற்றும் இடங்களுக்குள் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வாகனத்தையும் அனுமதிக்க வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யால தேசிய பூங்காவுக்குள் பதிவு செய்யப்படாத வாகனங்கள் பிரவேசிப்பதை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை உருவாக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஹோர்டன் சமவெளிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான திட்ட அறிக்கையைத் தொகுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment