போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த முப்படையினரால் மாத்திரம் முடியாது : அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த முப்படையினரால் மாத்திரம் முடியாது : அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என்கிறார் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திர முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று (31) திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்தது வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2 மாதத்திற்குள் யாழில் 508 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திர முடியாது. அனைவரதும் ஒத்துழைப்பு தேவை.

தற்போது வடக்கில் ஒரு புதிய பிரச்சனை உருவாகி வருகிறது. இலங்கை முழுவதும் இந்த போதைப் பொருள் பிரச்சனை ஒரு பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.ஆனால் வட பகுதியில் அது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.

கடந்த 2 மாதத்திற்குள் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்கால இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் செயற்பாடு தொடர்பில் ஒரு பொறுப்பாக செயற்பட வேண்டியுள்ளது. அந்த விடயத்தை தடுப்பதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டியதாக உள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மிக அதிக அளவில் காணப்படுகின்றது. கடந்த ஒரு சில மாதங்களாக போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் போதைப் பொருள்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது அதிகளவாக காணப்படுகின்றது. இது ஒரு விபரீதமான ஒரு செயல்பாடாக காணப்படுகின்றது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் பாரதூரமான செயற்பாடாக காணப்படுகிறது.

அத்தோடு இந்த விடயம் போதைப் பொருள் வியாபாரிகளால் உருவாக்கப்படுகிற செயற்பாடாக காணப்படுகின்றது. அதாவது குறிப்பாக யாழ் மாவட்டம் மிகவும் ஒரு பாதிப்பான நிலையில் காணப்படுகின்றது. இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நாங்கள் உடனடியாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக முப்படையினர் பொலிசார் அனைவரையும் இணைத்து இதனை தடுப்பதற்கான நடவடிக்கை உடனே எடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன். இந்த போதைப் பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு உபரியான செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் நான் ஆராயவுள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment