மக்களுக்கு தமக்கு விருப்பமான ஆட்சியை அமைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை - டில்வின் சில்வா - News View

About Us

About Us

Breaking

Monday, October 31, 2022

மக்களுக்கு தமக்கு விருப்பமான ஆட்சியை அமைக்க வாய்ப்பளிக்கப்படவில்லை - டில்வின் சில்வா

(எம்.வை.எம்.சியாம்)

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு போராடிய மக்களுக்கு தமக்கு விருப்பமானதொரு ஆட்சியை அமைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மக்களின் ஆதரவு இல்லை. பொருளாதார நெருக்கடிகளை தீர்பதற்கு புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும். அந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவினை பெற்றுக் கொண்ட அரசாங்கமாக அமைய வேண்டும்.

இருப்பினும் நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் தமக்கு விருப்பமான ஆட்சியாளர்களை தெரிவு செய்வதற்கு இறுதியில் முடியாமல் போனது. அதற்கான வாய்ப்புகளும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

எதிர்காலத்தில் தேர்தல் தொடர்பில் புதிய திருத்தங்களை முன்வைக்க உள்ளதாக கூறுகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும், அரசியலில் பெண்களின் இருப்பினை பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் 8000 எண்ணிக்கையாக உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கும் தேர்தல் சட்டமூலம் ஒன்றினை கொண்டு வரப்போகிறார்களாம். அதனை நிறைவேற்றும்போது காலம் கடந்து விடும்.

தேர்தல் தொடர்பில் சட்டமூலம் தயாரிக்கும் வரை தேர்தல் இல்லை என்று கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment