மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை, புதிய கலாச்சாரம் பிறந்துள்ளது - திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 30, 2022

மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை, புதிய கலாச்சாரம் பிறந்துள்ளது - திகாம்பரம்

(க.கிஷாந்தன்)

"மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கான வேலைத்திட்டத்தின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து செயற்படும். மலையகத்தில் இனி வன்முறை அரசியலுக்கு இடமில்லை. புதிய அரசியல் கலாச்சாரம் பிறந்துள்ளது" என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின தலைமையக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "நான் நான்கு வருடங்களாக அமைச்சராக இருந்தேன், அக்காலப்பகுதியில் மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றினேன். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் வெற்றியளிக்க பிரதான இரு தொழிற்சங்கங்களும் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த காலங்களில் தொண்டர்களை, தலைவர்கள் தூண்டிவிட்டனர். இதனால் வன்முறை அரசியல் உருவானது. சிறைச்சாலைகளுக்குகூட செல்ல வேண்டி ஏற்பட்டது. ஆனால் இனி அவ்வாறு நடக்காது, அவர்கள் அரசியலை அவர்கள் செய்வார்கள், எங்கள் அரசியலை நாம் செய்வோம். இணைய வேண்டிய நேரத்தில் இணைவோம். ஒரு கையால் மட்டும் ஓசை எழுப்ப முடியாது. இரு கைகளும் அவசியம்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில மொழி மூல பாடசாலையொன்று அவசியம். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் அவசியம்." என்றார்.

No comments:

Post a Comment