வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இலங்கைக்கு அனுப்பும் வெளிநாட்டு நிதியின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோர் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலத்தில் இலங்கைக்கு 2574.1 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் அதன் அளவு மேலும் அதிகரித்துள்ளதாகவும் அதற்கிணங்க கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோர் 32 கோடி 54 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதத்தில் அந்தளவு மேலும் அதிகரித்துள்ளதுடன் அந்த மாதத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பில் ஈடுபட்டுள்ளோர் இலங்கைக்கு அனுப்பியுள்ள தொகை 35 கோடி 93 இலட்சம் டொலர்களாகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment