"பச்சை வாயுக் கழிவுகளை கட்டுப்படுத்த வளர்ச்சியடைந்த நாடுகள் வழிகோல வேண்டும்" - அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

"பச்சை வாயுக் கழிவுகளை கட்டுப்படுத்த வளர்ச்சியடைந்த நாடுகள் வழிகோல வேண்டும்" - அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

பச்சை வாயுக் கழிவுகள், காலநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்களை கட்டுப்படுத்த, அதிக வாயுக்களை வௌியிடும் அபிவிருத்தியடைந்த நாடுகள் முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், இது குறித்த ஆலோசனைகளை இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு வழங்கவும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு ராஜ்யத்தில் நடைபெறும் எட்டாவது பசுமைப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நஸீர் அஹமட் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டை டுபாயின் மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அதிகார சபையும், உலக பசுமைப் பொருளாதார அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

டுபாயின் உலக வரத்தக மையத்தில் இம்மாதம் 28,29 ஆம் திகதிகளில் இம்மாநாடு நடைபெறுகிறது. உறுதியான எதிர்காலத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்யத்தில் நடைபெறும் கோப் 28, எகிப்தில் நவம்பரில் நடைபெறவுள்ள கோப் 27 காலநிலை மாநாடுகளுடன் இணைந்ததாக இந்த பசுமைப் பொருளாதார மாநாடு நடைபெறுகிறது.

தொழில்நுட்பம், கொள்கை வகுப்புக்கள் மற்றும் இயந்திரக் கழிவுகள் தொடர்பில் ஒருமித்த கருத்துக்களை எட்டும் நோக்கத்தை உறுதிப்படுத்த இம்மாநாடு உதவும். நிலையான அபிவிருத்தியை அடையும் ஐ.நாவின் கருதுகோளை பலப்படுத்தும் டுபாயின் முயற்சிகளுக்கு இது வெற்றியளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment