நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான காலத்தில், நாட்டில் உள்ள பல வீடுகளில் இன்னும் உணவு வீண்விரயமாக்கப்படுகின்றது.
இவ்வாறான உணவுப் பொருட்களை வீணாக்குவது எதிர்காலத்தில் உணவு நெருக்கடியை அதிகரிக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உணவு விரயத்தை குறைத்தால் உணவுக்கான செலவும் குறைவடையும் என்பது தனது அனுபவமாகும் என்று கல்கிசை ஹோட்டலின் பணிப்பாளர் கலாநிதி பபிலிஸ் சில்வா தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எதிர்நோக்கவிருக்கும் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் தற்போது நாட்டில் போதுமான உணவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் எவ்வளவு உணவை மூலப்பொருளாகப் பயன்படுத்த முடியும் என்பது பலருக்குத் தெரியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவு வீணாவதும் நாட்டின் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு காரணம் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் வாழும் மக்களே உணவுப் பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment