இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளில் அதிக கவனம் செலுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கை அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் சேனக கமகே கூறுகையில், வீடுகளில் பயிரிடக்கூடிய அனைத்து மரக்கறிகள் மற்றும் செடிகளையும் கட்டாயம் பயிரிட வேண்டும் எனவும் நாடு பாரிய உணவு நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கலாநிதி கமகே தெரிவித்துள்ளார்.
முருங்கை இலைகளில் இரும்பு, கல்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் தவிர அனைத்து 20 புரதங்களும் இருப்பதால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய பெற்றோர் அதிக பணம் செலவழிக்க வேண்டியதில்லை எனவும் பலாப்பழத்தின் மூன்று விதைகள் ஒரு முட்டையில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்கு சமமானவை என்று டொக்டர் கமகே கூறியுள்ளார்.
No comments:
Post a Comment