பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன், மருமகள் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன், மருமகள் கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராச்சியின் மகன் மற்றும் மருமகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் குறித்த இருவரும் சரணடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை வலஸ்முல்ல நீதிமன்றில் குறித்த இருவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment