அனுமதி பெறாது தன்னிச்சையாக விலையை அதிகரித்த லாஃப்ஸ் நிறுவனம் விசாரணைக்கு அழைப்பு : தேவையில்லாமல் உணவு, எரிபொருட்களை சேமித்து வைக்க வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

அனுமதி பெறாது தன்னிச்சையாக விலையை அதிகரித்த லாஃப்ஸ் நிறுவனம் விசாரணைக்கு அழைப்பு : தேவையில்லாமல் உணவு, எரிபொருட்களை சேமித்து வைக்க வேண்டாம்

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நேற்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லாஃப் எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலையை 6850 ரூபாவாகவும் 5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் எரிவாயு சிலிண்டரின் விலை 2740 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து விசாரிப்பதற்காக லாஃப்ஸ் நிறுவனத்தை அழைக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவித்த அவர், எரிவாயு விலையை உயர்த்துவதற்கு முன்னர் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேவைக்கு மேலதிகமாக உணவுப் பொருட்களையும் எரிபொருட்களையும் சேமித்து வைக்கக் கூடாது எனவும், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால் அது சந்தையின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையுடன் மக்கள் பொருட்களை சேமிக்க முற்படுவதாகவும் இதனால் எதிர்வரும் நாட்களில் சிக்கல் நிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பல மாதங்களாக சந்தையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவில்லை. நிர்வாகப் பிரச்சினை மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலை உருவானதோடு நேற்றுமுன்தினம் முதல் கேஸ் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனுடன் இணைந்ததாக அவற்றின் விலைகளையும் லாஃப்ஸ் அதிகரித்தது.

லாப் கேஸ் விலைகள் 4860 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் நிலையில் அதனை விட அதிக விலைக்கு லாஃப் கேஸ் விற்கப்படுவது குறித்து பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு சிலர் முறைப்பாடும் செய்துள்ளனர். சந்தையில் லாப் கேஸ் சிலிண்டர்களே கூடுதலாக விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment