கடன் வழங்கப்படாததால் அரிசி பதுக்கல் : ஆலை உரிமையாளர்களுடன் பிரதமர் ரணில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

கடன் வழங்கப்படாததால் அரிசி பதுக்கல் : ஆலை உரிமையாளர்களுடன் பிரதமர் ரணில் கலந்துரையாடல்

அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி வைக்கப்படுவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ பிரதமரிடம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நிதிக் கொள்கைகளுக்கு இணங்க இலங்கை வங்கி கடன்களை வழங்குவதை உறுதிசெய்து, வங்கிகளின் கடன் கொள்கைகளை கண்காணிக்குமாறு மத்திய வங்கி மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் எதிர்காலத்தில் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார்.

No comments:

Post a Comment