ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அகதி முகாம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற மோதலில் இஸ்ரேலிய துருப்புகளால் பலஸ்தீன ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெத்லஹாமுக்கு அருகில் இருக்கும் தைஷெஹ் முகாமிலேயே மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் இதில் 29 வயதான ஐமன் முஹைசன் என்பவரே கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது பற்றி இஸ்ரேலிய தரப்பு உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை.
முன்னதாக கடந்த புதனன்று கத்தியுடன் வந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் இஸ்ரேலிய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஒருவர் கொல்லப்பட்டது என கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையின் சுற்றிவளைப்பு தேடுதலின்போது ஏற்பட்ட இந்த மோதலில் மேலும் ஆறு பலஸ்தீனர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.
No comments:
Post a Comment