ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தினை இலங்கை தடுத்து வைத்துள்ளமை குறித்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ரஸ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் ஜனித்த அபயவிக்கிரம லியனகேயை நேரில் அழைத்து ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஜூன் மூன்றாம் திகதி ரஸ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் வெளிவிவகார அமைச்சிற்கு நேரில் அழைக்கப்பட்டார் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூன் இரண்டாம் திகதி ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்தை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்க வேண்டும் என நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு குறித்து இலங்கை தூதுவரிடம் வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது
இரு நாடுகளிற்கும் இடையிலான பாரம்பரிய நல்லுறவிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த விவகாரத்திற்கு உடனடியாக தீர்வை காணுமாறு இலங்கை அதிகாரிகளை கேட்டுக் கொண்டோம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment