இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியது ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 4, 2022

இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தியது ரஸ்யாவின் ஏரோஃப்ளோட்

தங்களது விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள ரஷ்யாவின் Aeroflot விமான சேவை, இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை இடைநிறுத்துவதாகவும், அனைத்து விமான பயணச்சீட்டு விநியோகத்தையும் இடைநிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் தங்களது எயர்பஸ் ஏ 330 ஜெட் விமானத்தினை தடுத்து வைத்துள்ளதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக  ஏரோஃப்ளோ அறிவித்துள்ளது.

விமானத்தின் இலங்கைக்கான தடையற்ற பயணம் குறித்து உறுதியற்ற நிலை காணப்படுவதால் இலங்கைக்கான விமான சேவையை உடனடியாக நிறுத்துவதாக  அறிக்கையொன்றில்  ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பயணத்திற்கானவிமான பயணச் சீட்டுகள் விற்பனை  இடைநிறுத்தப்படுவதாகவும் ஏரோஃப்ளோட் அறிவித்துள்ளது.

ஜூன் இரண்டாம்  நான்காம் ஐந்தாம் திகதிகளில் கொழும்பிலிருந்து பயணிப்பதற்கான விமான பயணச் சீட்டுகளை கொண்டுள்ள பயணிகள் இன்றும் நாளையும் இலங்கையிலிருந்து அழைத்து வரப்படுவார்கள் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களை கொண்டுவருவதற்கான விமானங்கள் கொழும்பிற்கு பயணிகள் இன்றி செல்லவுள்ளன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் திகதிக்கு பின்னர் மொஸ்கோவிற்கு வருவதற்காக  விமான பயணச் சீட்டுகளை பெற்றுள்ள பயணிகளும் திட்டமிட்டபடி  அழைத்து வரப்படுவார்கள் என  ஏரோஃப்ளோட் தெரிவித்துள்ளது.

191 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் கடந்த ஜூன் 02 ஆம் திகதி கட்டுநாயக்க, (BIA) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நகரிற்கு புறப்படவிருந்த Aeroflot - Russian Airlines, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் பேரில் நாட்டிலிருந்து செல்ல அன்றையதினம் (02) தடை விதிக்கப்பட்டது.

ஏரோஃப்ளோட் - ரஷ்ய விமான சேவை மற்றும் எயார்போர்ட் அண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் (ஶ்ரீ லங்கா) (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் Air Navigation Services தலைவரினால் (2ஆவது பிரதிவாதி) முன்வைக்கப்பட்ட மனு ஜூன் 03ஆம் திகதி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டது. 

இதன்போது மேற்படி தடை உத்தரவு தொடர்பில் 2ஆவது பிரதிவாதியினால் விளக்கம் கோரப்பட்டபோது, 2ஆவது பிரதிவாதி (விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட்) மீது எந்தவொரு தடையுத்தரவோ, எந்த வகையான இடைக்கால தடை உத்தரவுமோ பிறப்பிக்கப்படவில்லை என மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். 

எனவே, 2ஆவது பிரதிவாதி (விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட்) மற்றும் அல்லது அரசாங்கத்தினால் தடையுத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

அத்துடன், Aeroflot - Russian Airlines மற்றும் Celestial Aviation Trading 10 Limited (வாதி) இடையே, வணிக ரீதியான கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே காணப்படுவதாகவும், இது குறித்த இரண்டு தரப்பினரும் தீர்க்க வேண்டுமெனவும், அது தொடர்பில் அரசின் தலையீடு வலியுறுத்தப்படவில்லை என்பதும் இவ்வழக்கு விசாரணையின் போது குறிப்பிடப்பட்டது.

அதன்படி, இந்த விவகாரம் தொடர்பில் இரு தரப்பினரின் ஆட்சேபனைகளும் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு 2022 ஜூன் 08 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (Airport & Aviation Services) நிறுவன அறிக்கை

No comments:

Post a Comment