தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ஆ ம் திகதி தீர்மானிக்கும் என்கிறார் மனோ கணேசன் - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல்குழு 8ஆ ம் திகதி தீர்மானிக்கும் என்கிறார் மனோ கணேசன்

8ஆம் திகதி கொழும்பு நுகேகொடை செயலகத்தில் கூடவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டத்தில் 21ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, ஜனாதிபதி வகிக்க கூடிய அமைச்சுக்கள், பிரதமரை நீக்குவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம், அமைச்சர்களை நியமிப்பதற்கான பிரதமரின் அதிகாரம், இரட்டை குடியுரிமை, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுயாதீனம் உட்பட்ட விவகாரங்களை ஆராயும் அதேவேளை இவற்றை விட இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் பக்க விளைவாக விகிதாசார தேர்தல் முறைமைக்கும், 13ஆம் திருத்தம் மூலமான மாகாணசபை முறைமைக்கும் உடனடியாகவோ, காலம் கழித்தோ வரக்கூடிய ஆபத்துகள் தொடர்பிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி விசேட அவதானத்தை கொண்டுள்ளதாக மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment