அரசாங்க ஊழியர்கள் இனிமேல் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கும், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தும் பணி - News View

About Us

About Us

Breaking

Monday, June 6, 2022

அரசாங்க ஊழியர்கள் இனிமேல் நான்கு நாட்கள் அலுவலகத்திற்கும், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்தும் பணி

அரசாங்க ஊழியர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் வீட்டிலிருந்தே தமது பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர், அதற்கிணங்க அரசாங்க ஊழியர்கள் இனிமேல் நான்கு நாட்களுக்கு மட்டும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே தனது பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நிதி நெருக்கடி உள்ளிட்ட விடயங்களை கவனத்திற் கொண்டே இத்தகைய தீர்மானத்தை முன் வைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அதன் பின்னர் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுற்றாடல் தினத்தையொட்டி மாதிவலை பகுதியில் இடம்பெற்ற மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment