அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்புக்கடியால் ஒரு மாதத்தில் 6 சிறுவர்கள் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்புக்கடியால் ஒரு மாதத்தில் 6 சிறுவர்கள் பலி

கடந்த ஒரு மாத காலத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் ஆறு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் துலன் சமரவீர தெரிவித்தார்.

சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணம் பாம்பு தீண்டியதன் பின்பு ஏற்படுகின்ற தொற்றுநோய் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

அதற்கு இடையில் பாம்பு கடிக்குள்ளாகும் நோயாளர்களுக்கு வழங்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாத காரணமாக அநுராதபுரம் கலத்தாவ பகுதியைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கடந்த (08) பதிவாகியிருந்தது.

அவ்வாறு உயிரிழந்துள்ளவர் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய எம்.ஏ. ஜீ.சினுக் தெஷனாத் என்ற மாணவனாவர்.

குறித்த மாணவன் கடந்த 07 ஆம் திகதி மாலை தனது வீட்டுக்கு முன்னால் இன்னும் சில சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது அயலிலுள்ள தோட்டத்தில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற வேளையில் பாம்பு தீண்டியுள்ளது. 

பின்பு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் நிலை மிக மோசமாக இருந்ததனால் மேலதிக சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பதற்கு வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

போதனா வைத்தியசாலையில் ஆரம்ப கட்ட சிகிச்சை வழங்கியதன் பின்பு மேலதிக சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியசாலையில் போதுமானளவு மருந்து இல்லை என தெரிவித்ததாக சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

வைத்தியசாலையில் சில மருந்துகளை எழுதிக் கொடுத்தார்கள் வெளியில் இருந்து கொண்டு வரச் சொல்லி அனுராதபுரம் நகரில் உள்ள அனைத்து மருந்துச் சாலைகளையும் தேடிய போதும் மருந்து கிடைக்கவில்லை.

மருந்து இல்லாத காரணத்தால் எனது பிள்ளையை காப்பாற்ற முடியவில்லை என சிறுவனின் தந்தை தெரிவித்தார். அதனால் கடந்த 08 தனது மகன் அவரது வாழ்க்கைக்கு விடை பெற வேண்டியிருந்தது.

நானும் எனது மகனும் இந்நாட்டில் ஒரு டொலரைக்கூட திருடவில்லை. எங்களுக்கு இலவசமாக மருந்து கிடைக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை. குறைந்த பட்சம் காசி கொடுத்தாவது மருந்துகளை பெற்றுக் கொள்ள முடியாத இந்நாட்டில் எனது மகன் பிறந்ததையிட்டு கவலைப்படுகின்றேன். முடிந்தளவு கவனமாக இருங்கள் என சமூகத்திடம் லேண்டிக் கொள்கின்றேன்.

பாம்பு தீண்டினாலும் மருந்து இல்லை, நாய் கடித்தாலும் மருந்து இல்லை பிள்ளைகளினதும் உங்களினதும் பாதுகாப்பு தொடர்பில் கொள்கை ரீதியில் பின்பற்றுமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்கின்றேன் என சிறுவனின் தந்தை மேலும் தெரிவித்தார்.

அது தொடர்பில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் துலான் சமரவீர விடம் வினவியபோது பாம்பு கடித்த பிறகு அதற்கான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இருப்பதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மேற்கு நிருபர்

No comments:

Post a Comment