இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர் காக்கும் ஊசி மருந்துகளை வழங்கியது சீனா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 4, 2022

இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர் காக்கும் ஊசி மருந்துகளை வழங்கியது சீனா

(நா.தனுஜா)

பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், சீனா வழங்குவதற்குத் தீர்மானித்திருக்கும் 500 மில்லியன் யுவான் பெறுமதியான உயிர் காக்கும் ஊசி மருந்துகளில் முதலாவது கட்டமாக 256,320 ஊசிகள் நேற்று (03) நள்ளிரவு நாட்டை வந்தடைந்தன.

சீனாவினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் யுவான் கடனுதவியின் கீழ் முதற்கட்டமாக 10 மில்லியன் யுவான் பெறுமதியான 512,640 உயிர்காக்கும் எனொக்ஸாபெரின் சோடியம் ஊசிகள் வழங்கப்படவிருப்பதுடன், அவை இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுமென இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்திருந்த நிலையில், முதலாம் கட்ட பொதிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன.

அதன்படி 256,320 ஊசிகள் சி.எக்ஸ்-3119 என்ற விமானத்தின் ஊடாக நேற்று நள்ளிரவு கொழும்பை வந்தடைந்தது. எஞ்சிய 256,320 ஊசிகள் இம்மாதத்தின் பின்னரைப்பகுதியில் நாட்டை வந்தடையும் என்று சீனத்தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த எனொக்ஸாபெரின் சோடியம் என்பது குருதியை ஐதாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற மருந்தாகும். இது மகப்பேற்று சத்திர சிகிச்சை மற்றும் அதனையொத்த சத்திர சிகிச்சைகள், மாரடைப்பு ஆகியவற்றின்போது பயன்படுத்தப்படும்.

இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த 512,640 ஊசிகளும் 6 மாத காலத்திற்குப் போதுமானவையாகும் என்று இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment