50 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல் : நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

50 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல் : நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டிய நிலை

(எம்.எம்.சில்வெஸ்டர்)

40,000 மெற்றிக் தொன் உராய்வு எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல் (15) இன்றுடன் 50 நாட்களாக தரித்து நிற்கிறது.

குறித்த எரிபொருள் தாங்கி கப்பல் கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்த போதிலும், டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்திலிருந்து கப்பலை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்கப்பலை நங்கூரமிடுவதற்கு தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாகவும், எரிபொருள் தாங்கி விடுவிக்கப்பட்டிருந்தால், நாட்டிலுள்ள 6 மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திள் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த முடிவை எடுக்கத் தவறியதால், போக்குவரத்துக்காக ஒதுக்கப்பட்ட 1500 மெற்றிக் தொன் டீசலை, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது நாட்டில் டீசலை பெற்றுக் கொள்வதற்காக வாகன சாரதிகள் இரவு பகலாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment