இலங்கைக்கு 120 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க அமெரிக்கா அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

இலங்கைக்கு 120 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க அமெரிக்கா அனுமதி

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவாகவும் 120 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.

சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்காக இதில் 100 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.

மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காக 15 மில்லியன் டொலர் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த கடன் தொகையில் 5 மில்லியன் டொலர் உணவு உற்பத்தி நிறுவனமொன்றுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதனை இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்காகவும் மக்களிற்கு ஆதரவாகவும் கடந்த 70 வருடங்களாக அமெரிக்கா வெளிநாட்டு உதவி கடன்கள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய அறிவிப்பு தனியார் துறையினருக்கு சிறந்த செய்தி என மேலும் தெரிவித்துள்ள அவர் டிஎவ்சியின் 120 மில்லியன் அமெரிக்க டொலர் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களை சென்றடையும்,என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment