இலங்கை மாணவர்களுக்கான அனுமதி வழங்கலைத் தாமதப்படுத்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 26, 2022

இலங்கை மாணவர்களுக்கான அனுமதி வழங்கலைத் தாமதப்படுத்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்

(நா.தனுஜா)

நாட்டின் மிக மோசமான பொருளாதார நிலைவரத்தின் காரணமாக சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களின் உயர் கற்கை நெறிக்கான அனுமதி வழங்கலைத் தாமதப்படுத்துவதுடன், ஏற்கனவே தமது பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் அவர்களுக்குரிய கட்டணங்களை உரியவாறு செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி வருகின்றன.

இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமான நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கலாக அனைத்துப் பொருட்களினதும் விலைகள் சடுதியாக அதிகரித்திருக்கின்றன.

இதன் விளைவாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு உயர்வினால் நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டொலருக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக இங்கிருந்து வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்புவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமது பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள் அக்கற்கை நெறிக்குரிய கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டனின் பிரபல பல்கலைக்கழகமொன்றில் உயர் கல்வியைத் தொடர்வதற்காக விண்ணப்பித்த இலங்கை மாணவர் ஒருவருக்கான அனுமதி வழங்கலைத் தாமதிப்பதாக அறிவித்திருக்கும் அப்பல்கலைக்கழகம், மிக மோசமடைந்துவரும் நாட்டின் பொருளாதாரத்தை அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டதாகவும் அறிய முடிகின்றது.

இலங்கையிலுள்ள அம்மாணவரின் குடும்பத்தாரிடமிருந்து கற்கை நெறிக்குரிய கட்டணம் உள்ளிட்ட செலவுகளை ஈடுசெய்வதற்கு அவசியமான பணத்தைப் பெறுவதில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்பதாலேயே அம்மாணவருக்கான அனுமதி வழங்கல் தாமதப்படுத்தப்படுவதாக அப்பல்கலைக்கழகத்தினால் குறித்த மாணவனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை உயர் கல்வியைத் தொடர்வதற்காக மேலும் பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்திருக்கக் கூடிய இலங்கை மாணவர்களுக்கான அனுமதி தாமதப்படுத்தப்படுவதாகவும், அவ்வாறு பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்கும் பட்சத்தில் அங்கு செல்வதற்குரிய விசா வழங்கல் நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்படுவதாகவும் அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment