துறைமுக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை : சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது - இலங்கை துறைமுக அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

துறைமுக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதில் உண்மையில்லை : சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது - இலங்கை துறைமுக அதிகார சபை

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையின் துறைமுக சேவை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். துறைமுக அதிகார சபை, பிரதான தனியார் முனையங்களுடன் ஒன்றிணைந்து செயற்படுகிறது என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான்ன தெரிவித்தார்.

துறைமுக அதிகார சபையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கொழும்பு துறைமுகம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

தேசிய மட்டத்திலான சமூக வலைத்தளங்களிலும் அந்த தவறான செய்திகள் எவ்விதமான திருத்தங்களுமின்றிய வகையில் பிரசுரமாகியிருப்பதையும் அவதானித்துள்ளோம்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியலில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார பாதிப்பு இலங்கையின் துறைமுக சேவை கட்டமைப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை தேசிய மட்டத்தில் திருத்திக் கொள்வது அவசியமாகவுள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி துறைமுக சேவை கட்டமைப்பிற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

கொவிட் தாக்கத்தின் போது சுகாதார அறிவுறுத்தல்களை செயற்படுத்துவதில் காணப்பட்ட தடைகள் சேவைத்துறைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு மற்றும் தெற்கு முனையங்களின் நிர்வாக கட்டைப்பும், துறைமுக அதிகார சபையும் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் சேவை கட்டமைப்பு முன்னெடுக்கப்படுகிறது.

மீள் ஏற்றுமதி நடவடிக்கைகள்,தேசிய கொள்கலன் விநியோகம் மற்றும் தேசிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகள் முனையங்களின் கூட்டிணைவுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

சர்வதே நிறுவனங்களுடனான நிதி கொடுக்கல் டொலர் நாணய அலகில் முன்னெடுக்கப்படுவதுடன்,தேசிய மட்டத்திலான கொடுக்கல் வாங்கள் ரூபா அலகில் முன்னெடுக்கப்படுகிறது. துறைமுக அதிகார சபை எவ்வித நிதி நெருக்கடியினையும் இதுவரை எதிர்க்கொள்ளவில்லை என்றார்.

No comments:

Post a Comment