(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) எனும் சட்ட மூலத்தின் சில பிரிவுகளுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்பதுடன் சட்ட மூலத்தின் 2 (1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 3. 4(இ), 111(ஏ)(1)(ஆ) மற்றும் 111(க)(அ) ஆகியவற்றுடன் முரண்படுகின்றது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் இதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றம் புதன்கிழமை (4) கூடியபோது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்ட மூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகிறேன்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய ஏற்பாடுகளுக்கு இணங்க உயர் நீதிமன்றம் பின்வரும் தீர்மானங்களை மேற்கொள்கின்றது.
(i) சட்ட மூலத்தின் அட்டவணை I உடன் சேர்த்து வாசிக்கப்படும் 2 (1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் 43(1) ஆம் உறுப்புரையுடன் முறணானது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் இவ் வாசகம் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் தேவைபாடான விசேட பெரும்பான்மையுடன் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் எனவும் தீர்மானிக்கின்றது.
பாராளுமன்ற குழுநிலை திருத்தமொன்றின் ஊடாக அட்டவணை I இலிருந்து 49 ஆம் விடயத்தை நீக்கிக் கொள்ள முடியும் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார் அவ்வாறு அட்டவணை I திருத்தப்பட்டதன் பின்னர் அது அரசியலமைப்புக்கு முரணாகாது என்றும் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
(ii) சட்டமூலத்தின் 2 (1) ஆம் வாசகம் அரசியலமைப்பின் உறுப்புரைகள் 3. 4(இ), 111(ஏ)(1)(ஆ) மற்றும் 111(க)(அ) ஆகியவற்றுடன் முர ண்படுகின்றது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளதுடன் இவ் வாசகம் அரசியலமைப்பின் 84 (2) ஆம் உறுப்புரையின் தேவைப்பாடான விசேட பெரும்பான்மையுடனும் அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி மக்கள் ஆணையொன்றின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டால் மாத்திரமே நிறைவேற்றப்படலாம் எனவும் நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.
அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலத்தின் 2 (1) ஆம் வாசகத்திலிருந்து கருதப்படும் ஏற்பாடு நீக்கப்படும் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
வாசகம் 2 (1) அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டால் சட்டமூலம் அரசியலமைப்புடன் முறண்படாது.(iii) வாசகம் 2, வாசகம் 3, அட்டவணை I மற்றும் சட்டமூலத்தின் விரிவுப் பெயர் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்களை செய்வதன் மூலம் இச் சட்டமூலம் அரசியலமைப்புடன் முரண்படாது என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்றார்.
No comments:
Post a Comment