லங்கா ஐ.ஓ.சியின் இலாபம் பன்மடங்காக அதிகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 7, 2022

லங்கா ஐ.ஓ.சியின் இலாபம் பன்மடங்காக அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 3.37 பில்லியன் ரூபா வரிக்கு பிந்திய இலாபத்தைப் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் அந்த நிறுவனம் 968 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியிருந்தது. 

அதற்கமைய, கடந்த வருடத்தின் முதல் காலாண்டு இலாபத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் லங்கா ஐஓசி நிறுவனம் 248 சதவீதம் அதிகமாக இலாபமீட்டியுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதி காலாண்டிலும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் வருமானம் 42.7 சதவீதம் அதிகரித்து 29.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. 

விற்பனைச் செலவுகள் 29.5 சதவீதம் அதிகரித்து 24.5 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், இறுதி காலாண்டில் 5 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றிருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 192 சதவீத அதிகரிப்பாகும்.

No comments:

Post a Comment