யோஷித்தவுக்கு எதிராக அனுரகுமார சுமத்திய குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம் : சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 4, 2022

யோஷித்தவுக்கு எதிராக அனுரகுமார சுமத்திய குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிக்கிறோம் : சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமர் அலுவலக செயலணியின் தலைவர் யோஷித்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகளை வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்தினம் (03) பிரதமர் அலுவலக செயலணியின் தலைவர் யோஷித்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக சுமத்திய போலிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மன்றக் கல்லூரியில் 03.05.2022 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான இடங்களென குறிப்பிட்டு காணி உறுதிப்பத்திர இலக்கங்கள் மற்றும் காணிகளின் பெயர்கள் முன்வைக்கப்பட்டு அனுரகுமார திஸாநாயக்க எம்பி பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகள் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலணியின் தலைவர் யோஷித்த ராஜபக்‌ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை முன்வைத்ததால் அவருக்கு ஏற்பட்ட அவமானம் தொடர்பில் அனுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தனது சட்டத்தரணிகளுக்கு அவர் ஆலோசனை பெற்றுக் கொடுத்துள்ளார். 

அந்த ஊடக மாநாட்டில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட போலி செய்தியை வன்மையாக கண்டிக்கின்றோமென்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment