வரி அறவீட்டை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை : ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தவறு என்கிறார் அமைச்சர் அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

வரி அறவீட்டை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை : ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தவறு என்கிறார் அமைச்சர் அலி சப்ரி

(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழிமுறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். அதனைத் தவிர வேறு மாற்றுவழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் வட் வரியை 8 சதவீதம் வரை குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் தவறானதாகும் என்று நிதி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்யக் கூடிய நிலைமையிலுள்ள இலங்கை போன்ற நாட்டுக்கு தற்போது நடைமுறையிலுள்ள வரி வீதம் எந்தளவிலும் போதுமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய வட் வரி வீதத்தினை நூற்றுக்கு 13 - 14 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள் இறக்குமதிக்காக சுமார் 4 பில்லியன் டொலருக்கும் அதிக நிதி தேவையாகவுள்ளது.

அதனை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment