இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கத்தினால் கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று கைவிடப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் டி.வி. சாந்த சில்வா இன்று அது தொடர்பில் தெரிவிக்கையில், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இன்று மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமையவே வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டு ள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமது கோரிக்கைக்கு இணங்க போக்குவரத்து கொடுப்பனவில் 90 வீதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கிணங்க இன்று பிற்பகல் முதல் மீண்டும் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.
எரிபொருள் போக்குவரத்திற்கான கொடுப்பனவை 40 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரியே மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அதற்கிணங்க இன்றைய பேச்சு வார்த்தையின் போது 30 வீத அதிகரிப்பைப் பெற்றுக் கொடுப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment