நுவரெலியாவிலும் உருவானது ”கோட்டா கோ கம” - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 3, 2022

நுவரெலியாவிலும் உருவானது ”கோட்டா கோ கம”

நுவரெலியா வாழ் இளைஞர்கள் ஏற்பாட்டில் “கோட்டா கோ கம” கிளை ஒன்றை ஸ்தாபித்துள்ளனர்.

நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு முன்பாக இந்த “கோட்டா கோ கம” கிராமத்தின் கிளையை அமைத்துள்ளனர்

கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டில் பல இடங்களில் “கோட்டா கோகம” கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது நுவரெலியாவிலும் “கோட்டா கோகம” என்ற கிளையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment