சகோதரிகளால் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி : 9 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

சகோதரிகளால் நடாத்திச் செல்லப்பட்ட விபச்சார விடுதி : 9 பெண்கள் உள்ளிட்ட 10 பேர் கைது

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அநுராதபுரம் புதிய நகரப் பகுதியில் நடாத்திச் சென்ற இரண்டு விபச்சார விடுதிகளை சோதனை செய்து 10 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு, எப்பாவள, பொலன்னறுவை, மகாவுலன்குளம், நீர்கொழும்பு பகுதிகளில் வசிக்கும் 19 - 35 வயதுடைய 09 பெண்களும் ஒரு ஆணும் இதில் அடங்குவதாக பொலிசார் தெரிவிதத்னர்.

ஆயுர்வேத மசாஜ் மையங்களாக ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்து இந்த இடங்களில் விபச்சாரத்தை நடத்திச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை சேவையில் ஈடுபடுவதாக கூறியே பதிவு செய்துள்ள போதும், அதிகாலை 04.00 மணியளவில் விடுதியை சுற்றிவளைக்கும் போதும் பெண்கள் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு நிலையங்களினதும் உரிமையாளர்களாக கைது செய்யப்பட்டுள்ள கஹட்டகஸ்திகிலிய, திகன் ஹல்மில்லாவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரிக்கு இரண்டு விடுதிகளும் இளைய சகோதரிக்கு ஒரு விடுதியும் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

ரூபா 1,500 செலுத்தி உட்சென்ற பின்னர் ஒரு பெண்ணை 10 ஆயிரம் ரூபாவிற்கு விலைக்கு பெற்றுக் கொள்ள முடிவதுடன் குறித்த பெண்ணுடன் தான் விரும்பிய இடத்தில் இரவை கழிப்பதற்கு 25 ஆயிரம் ரூபாவை அறவிடுவதாகவும் பொலிஸ் உளவாளி ஊடாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அநுராதபுரம் நிருபர்

No comments:

Post a Comment