வடமராட்சி கடலில் மீனவரின் படகுடன் கடற்படை படகு மோதி விபத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, May 1, 2022

வடமராட்சி கடலில் மீனவரின் படகுடன் கடற்படை படகு மோதி விபத்து

வடமராட்சி கடற்பரப்பில் கடற் படையினரின் படகு மோதி கடற்தொழிலாளர் சங்கத் தலைவரின் படகு சேதமடைந்துள்ளது.

நேற்றையதினம் (30) சனிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடற் றொழிலாளிகள் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது.

படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற் தொழிலாளிகள் இருவரையும் கடற்படையினர் படகுடன் கரை சேர்த்துள்ளனர்.

சம்பவத்தில் கடற் படையின் படகு மோதியதனால் தனது படகு மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளதாகவும் 10 லட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கடற்தொழிலாளர் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment