இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி7 நாடுகள் ஒத்துழைப்பு : வரவேற்றுள்ள பிரதமர் ரணில் - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

இலங்கைக்கு கடன் நிவாரணங்களை வழங்க ஜி7 நாடுகள் ஒத்துழைப்பு : வரவேற்றுள்ள பிரதமர் ரணில்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளுக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயலாற்றத்தயாராக உள்ளதாக ஜி - 7 நாடுகள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்காக ஒத்துழைப்பு வழங்க ஜி-7 நாடுகள் முன்வந்துள்ளன.

உலக வல்லரசுகளின் அமைப்பான ஜி -7 நாடுகளின் நிதியமைச்சர்களது மாநாடு ஜேர்மனியில் இடம்பெறுகிறது.

அந்த மாநாட்டில் இணங்கப்பட்ட கடித வரைவு ஒன்றில், இலங்கை பெற்றுள்ள கடன்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கைக்கான உதவிகளை வழங்க ஜி-7 நாடுகள் ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சர்வதேச நாணய நிதியத்துடனான வினைத்திறனான பேச்சுவாத்தைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அத்துடன் இலங்கைக்கு கடன் வழங்கிய செல்வந்த நாடுகள், கடன் நிவாரணத்தை வழங்க வலியுறுத்தப்படுவதுடன், பெரு நன்கொடை அமைப்பான 'பரிஸ்க்லப்' ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்கவும் ஜி-7 நாடுகள் எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்துள்ளதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.

இலங்கை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ''இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும்.'' என்று தெரிவித்துள்ளார்.

Social embed from twitter

No comments:

Post a Comment