அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி கோட்டாபய ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 5, 2022

அவசரகாலச் சட்டத்தினை நீக்கினார் ஜனாதிபதி கோட்டாபய !

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அவசரகாலச் சட்டத்தை நீக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏப்ரல் 03ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினால் இது குறித்து பல்வேறு வகையிலும் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் பேசப்பட்டது.

அது மாத்திரமன்றி இது தொடர்பான விவாதமொன்றை நடாத்துவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த அவசரகால நிலையை நீக்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment