முன்னுரிமை வழங்காவிடின் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் : அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

முன்னுரிமை வழங்காவிடின் சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் : அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

போக்குவரத்து அமைச்சு தனியார் பேரூந்து சேவைக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்குவது குறித்து நாளை சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை தனியார் பேரூந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும். எரிபொருள் விநியோகத்தில் அரச பேரூந்து சேவைக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேரூந்து சேவை உரிமையாளர்கள் பெரும் அளெகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். இன்றையதினம் நாடு தழுவிய ரீதியில் 15 சதவீதமான அளவில் தான் தனியார் பேரூந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

எரிபொருளை சேமித்து வைத்திருந்த பேரூந்து உரிமையாளர்கள் மாகாணங்களுக்கு இடையிலான பேரூந்து போக்குவரத்து சேவையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுத்துள்ளதுடன், ஏனைய உரிமையாளர்கள் மண்ணெண்ணெயை பாவித்து போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டுள்ளனர். டீசல் பாவனைக்கு பதிலாக தொடர்ந்து மாற்று திட்டங்களை செயற்படுத்த முடியாது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஊடாகவும், அரச டிபோக்கள் ஊடாகவும் தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது என குறிப்பிட்டமை வெறும் பேச்சளவில் மாத்திரம் வரையறுக்கப்பட்டதாக அமைந்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் அரச பேரூந்து சேவைக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

எரிபொருள் பிரச்சினைக்கு போக்குவரத்து அமைச்சு நாளைய தினத்திற்குள் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்காவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை தனியார் பேரூந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என்பதை உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

எரிபொருள் பற்றாக்குறை என தொடர்ந்து பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டு நாட்களை கடத்துவதால் எமது பிரச்சினைக்கு ஒருபோதும் இனி தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment